புதுச்சத்திரம் அருகே விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 4பேர் கைது\

சேந்தமங்கலம், ஏப்.10: நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்துள்ள ஏ.கே சமுத்திரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய குடியிருப்பு பகுதியில், விபச்சாரம் நடைபெற்று வருவதாக, புதுச்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள கவுண்டர் பாளையத்தை சேர்ந்த கோடீஸ்வரன் (22), ராசிபுரம் கவுண்டம்பாளையத்தில் சேர்ந்த தரணிதரன் (26), சேலம் ஓமலூர் அடுத்த கமலாபுரம் பகுதியை சேர்ந்த மோகன் (33), ராசிபுரம் அடுத்துள்ள மங்களபுரம் உரம்பு கிணறு பகுதியை சேர்ந்த உண்ணாமலை (50) என்ற பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் உண்ணாமலை அப்பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை அழைத்து வந்து, விபச்சாரம் செய்தது தெரியவந்தது. அப்பகுதி வழியாக வரும் கல்லூரி மாணவர்களை பெண்களை காட்டி மயக்கி, விபச்சாரத்தில் ஈடுபட வைத்தது விசாரணையில்  தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை போலீசார் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>