திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு

திருச்செங்கோடு, ஏப். 10: திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, துணை ராணுவம் உள்ளிட்ட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேற்று பாதுகாப்பு ஏற்பாட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மெகராஜ், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சட்டமன்ற தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட ராசிபுரம், சேந்தமங்கலம்,    நாமக்கல், பரமத்திவேலூர்,  திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை, வேட்பாளா–்கள் மற்றும் வேட்பாளா–்களின் முகவா–்களின் முன்னிலையில், கடந்த 7ம்தேதி ஸ்டிராங் ரூமில் வைத்து பூட்டி சீலிடப்பட்டன.  மேலும் அறை கதவுகளை சுற்றிலும் 3 அடிக்கு தடுப்பு கட்டைகள் அமைத்து அடைத்துள்ளனர். இந்த அறைகளின் வாயிலில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரா்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படை வீரா்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீராகள், மாவட்ட போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு பணிகளை, கண்காணிப்பு அறையில் உள்ள டிவிக்கள் மூலமாக வேட்பாளா–்கள் மற்றும் வேட்பாளா–்களின் முகவா–்கள் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மெகராஜ்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னா் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினா் தண்ணீர் நிரப்பப்பட்ட வாகனங்களுடன் தயார் நிலையில் இருப்பதையும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணிகளை உறுதி செய்ய வருகை தந்த வேட்பாளா–்களின் முகவா–்களின் அடையாள அட்டைகளை அவர்  ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: