கரூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி

கரூர், ஏப்.10: கரூரில் தனியார் நிறுவனங்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று துவங்கியது.கரூர் மாவட்டத்தில் நேற்றுமுதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனோ தடுப்பூசி போடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. கரூர் நகரைச் சுற்றிலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகளவு பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கரூர்- சேலம் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், வாங்கல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சக்தியேந்திரன் தலைமையிலான குழுவினர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனோ தடுப்பூசி போடும் பணியை துவக்கியுள்ளனர்.மாவட்டம் முழுவதும் இதற்கான பணிகள் அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: