திருமயம் அருகே தனியார் கோழி பண்ணையில் வேளாண் மாணவிகள் ஆய்வு

திருமயம். ஏப்.9: திருமயம் பகுதியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் களப்பணியில் ஈடுபட்டு அப்பகுதி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருவதோடு, விவசாய நுணுக்கங்களை கற்றறிந்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரதில் குடுமியான்மலை தமிழ்நாடு வேளாண்மை பல்கைக்கழகம், வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதி ஆண்டு மாணவிகள் திருமயம் பகுதியில் உள்ள விவசாயிகளுடன் கடந்த 2 மாதங்களாக களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக நேற்று திருமயம் அருகே உள்ள அடுகப்பட்டி கிராமத்தில் விவசாயி சாத்தப்பனுக்கு சொந்தமான கோழிப் பண்ணயைப் பார்வையிட்டு கோழி வளர்ப்பு முறை பற்றி கேட்டறிந்தனர். அப்போது அக்கல்லூரி முதல்வர் செங்குட்டுவன், பேராசிரியர் மற்றும் உதவி பேராரியருடன் நேரடியாக அக்கிராமத்திற்கு சென்று மாணவிகளை சந்தித்து அவர்களது பணிகளை பார்வையிட்டனர்.

இதில் பேராசிரியர்கள் மாணவிகளுக்கு உரங்கள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் களைகொல்லிகள் பற்றிய செயல்விளக்கங்களை கூறினார்கள்.

இதனிடையே மாணவிகள் கடந்த 50 நாட்களாக திருமயம் வட்டாரத்தில் தங்கியிருந்து விவசாயிகளை நேரடியாக சந்தித்து வேளாண் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர். இந்த களப்பணியில் வேளாண் துறை இறுதியாண்டு மாணவிகள் புவனேஸ்வரி, கிரீஷ்மா, அகல்யா, கிருத்திகா, ராணி, வர்ஷினி மற்றும் அழகேஸ்வரி ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: