க.பரமத்தி கடைவீதியில் அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் பொருத்தப்படுமா?

க.பரமத்தி, ஏப்.9: க.பரமத்தி கடைவீதியில் அதிக வெளிச்சம் திறன் கொண்ட மின் விளக்குகளை அமைத்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முன் வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி உள்ளது. இந்த கடைவீதியில் க.பரமத்தி சுற்று வட்டாரத்தில் உள்ள எட்டுக்கும் மேற்பட்ட ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தினசரி பல்வேறு பணிநிமித்தமாக சென்று விட்டு இரவு வீடு திரும்புகின்றனர். கடை வீதியில் உள்ள கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க தினசரி ஏராளமானோர் வருகின்றனர்.இதனால் க.பரமத்தி பேருந்து நிறுத்தம் பகுதியில் அதிகாலை முதல் இரவு 12மணி வரை மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் கரூர் -கோவை தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான பஸ்கள் , ஜல்லி லாரிகள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவைகள் செல்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த கடைவீதிக்கு இரு சக்கர வாகனங்களில் வருவோரும், சாலையை நடந்து கடப்போரும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகி காயப்பட்டு அதில் சிலர் இறக்கும் சம்பவங்கள் நடந்து உள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த கடை வீதி பகுதி முழுவதும் ஊராட்சி நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்ட மின் விளக்குள் அனைத்தும் குறைந்த வெளிச்சம் கொண்ட மின் விளக்குகளை அமைத்துள்ளதால் வெளிச்சம் குறைவாக காணப்படுவதால் எதிரே நிற்கும் நபர்களை கூட அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இதனால் ராஜபுரம் சாலையிலிருந்து வரும் வாகனங்களும், ஆரியூரிலிருந்து வரும் வாகனங்களும், தேசிய நெடுஞ்சாலையை கடக்கம் போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கி தவிக்கின்றன.எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் க.பரமத்தி பேருந்து நிறுத்தம் பகுதியில் அதிக திறன்கொண்ட மின் விளக்குகளை பயன்படுத்த வேண்டுமென க.பரமத்தி சுற்றுப்பற பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: