திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர கோரிக்கை

திருப்பூர், ஏப்.9:திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக இடிக்கப்பட்டு தற்போது புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில்  பொள்ளாச்சி, உடுமலை, பல்லடம் வழியாக கோவை செல்லும் பேருந்துகள் கலெக்டர் அலுவலகத்திலிருந்தும். ஈரோடு, சேலம் செல்லும் பேருந்துகள் யுனிவர்சல் தியேட்டர் பகுதியிலிருந்தும், கரூர் செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் முன்பிருந்தும் செல்லுகிறது. இங்கு திருப்பூரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நகர பேருந்துகளும் வந்து செல்கின்றது. இவற்றில் பயணிப்பதற்காக தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள டவுன் பேருந்துகள் நிற்கும் இடத்தில் நிழற்குடை இல்லாமல் இருக்கின்றது. கடுமையான வெயில் கொளுத்தும் சயமத்தில் பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் கடும் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் நிழற்குடை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>