தாயை தாக்கிய வேதனையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

சேந்தமங்கலம், ஏப்.9:  சேந்தமங்கலம் மாவிழியர் தெருவை சேர்ந்த விவசாயி வீரமலையின் மகன் ராஜ்குமார்(24). இவர் மாங்காய் பறிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், அதேபகுதியை சேர்ந்த லாவண்யா என்பவருடன் திருமணம் நடந்தது. தற்போது லாவண்யா கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 6ம்தேதி வாக்குபதிவின் போது, ராஜ்குமார் ஒரு கட்சிக்கு ஆதரவாக குடிபோதையில் வாக்குச்சாவடி அருகே தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அவரது தாயார் சரோஜா கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது  ராஜ்குமார், தாக்கியதில் படுகாயமடைந்த சரோஜா, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மது போதையில் தாயை அடித்து விட்டதால், மனவேதனை அடைந்த ராஜ்குமார், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சேந்தமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>