கிணற்றில் தொழிலாளி சடலம்

நாமக்கல், ஏப்.9: நாமக்கல் அடுத்த வள்ளிபுரம் கோனாம்பரப்பை சேர்ந்தவர் மாரப்பன் (49). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை, வேலைக்கு மொபட்டில் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று, பெரியப்பட்டியை சேர்ந்த சின்னதம்பிக்கு சொந்தமான கிணற்றில், மாரப்பனின் சடலம்  கிடந்தது. இதுகுறித்து பொது மக்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாரப்பன் மனைவி வாசுகி, நாமக்கல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிந்து, மாரப்பன் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

திருச்செங்கோடு அருகே

வளைவு சாலையில் வேகத்தடை

அமைக்க மக்கள் வலியுறுத்தல்திருச்செங்கோடு, ஏப்.9: திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரத்தில் இருந்து வையப்பமலை செல்லும் பிரதான சாலை உள்ளது. இது எலச்சிபாளையம் ஒன்றியத்தை சேர்ந்த ஆத்துமேடு பாலமேடு,  கோட்டபாளையம்,  மொரங்கம்  வழியாக வையப்பமலை செல்கிறது. மொரங்கம்  வழியாக தினமும் சரக்கு லாரிகள், பஸ்கள், டிராக்டர்கள்,   கார்கள், டூவீலர்கள் என நூற்றுக்கணக்கான  வாகனங்கள் வந்து செல்கின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், நெசவாளர்கள்  பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள்  இந்த  சாலையை பயன்படுத்துகின்றனர்.  மொரங்கம் பஸ் நிறுத்தம் அருகே, இந்த சாலை மிகவும் வளைவாக உள்ளதால் எதிரில் வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை. வளைவில் வேகமாக  செல்லும் வாகனங்கள், குறிப்பாக டூவீலர்கள் சறுக்கி விழுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, வாகன விபத்துக்களை தடுக்க, சாலையின் வளைவிற்கு முன்பும், பின்பும் வேகத்தடை  அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

>