ஏரல் அரபி கல்லூரி பட்டமளிப்பு விழா

ஏரல், ஏப். 9:   ஏரல் மன்பவுல் கைராத் மகளிர் அரபிக் கல்லூரியில் 15ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. புதுமனை குத்பா பள்ளி வாசல் மர்ஹீம் ஹாஜி அப்துல்வஹாப் நினைவு அரங்கத்தில் நடந்த இவ்விழாவுக்கு ஜமாத் தலைவர் உஸ்மான் அலி தலைமை வகித்தார். அப்துல் ரசாக், காஸிம் முஸ்தாக் அலி முன்னிலை வகித்தனர். புதுமனை பள்ளி இமாம் முஹமது இர்ஷாத் ஆலிம் கிராத் ஓதினார். ஏரல் முஸ்லிம் வணிகர் நலச்சங்கத் தலைவர் பாக்கர் அலி வரவேற்றார். பெரிய பள்ளி இமாம் அப்துல் அஜிஸ், அப்துல்ரஹ்மான், யாகூப் , அரபாத் வாழ்த்திப் பேசினர். கல்லூரி முதல்வர் மவுலவி அலிஹாஜ், அபுல்ஹலன் ஆகியோர் மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினர். ஹாஜா முகைதீன் நன்றி கூறினார்.

Related Stories: