ஆண்டிபட்டியில் வாக்குச்சாவடி முன்பு வாக்கு சேகரித்த அமமுகவினர் மீது வழக்கு

ஆண்டிபட்டி, ஏப். 8: ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் நேற்று முன்தினம் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது க.விலக்கு அருகே சிலோன் காலனி பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி முன்பு தேர்தல் விதிகளை மீறி அமமுகவினர் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அமமுக நிர்வாகி ரவிச்சந்திரன், உதய் ஆகிய 2 பேரையும் பிடித்து க.விலக்கு காவல் நிலையத்தில் ஓப்படைத்தனர். போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: