குளித்தலை, ஏப். 4: கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து குளித்தலை ஒன்றியம், நகரம், நங்கவரம், மருதூர் பேரூராட்சி, கிருஷ்ணராயபுரம், கிழக்கு ஒன்றியம், தோகமலை கிழக்கு, மேற்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இவரை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரசாரம் செய்தார் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆகியோர் பிரசாரம் செய்தனர். அதுமட்டுமல்லாமல் ஆங்காங்கே கிராமப்பகுதிகளில் இளைஞர்கள் மாற்று கட்சியினர் ஆர்வத்துடன் திமுகவில் இணைந்து பணியாற்றுகிறோம் என ஆதரவு தெரிவித்து வந்த வண்ணம் இருக்கின்றனர்.