ஏப். 6 ம் தேதி வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்பட வேண்டும்: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

திருவள்ளூர், ஏப் .2 : திருவள்ளூர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ச.சுதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,  வாக்குப்பதிவு தினமான வரும் 6ம் தேதி தொழிலாளர் ஆணையர் வள்ளலார் உத்தரவின்படியும், சென்னை, கூடுதல் தொழிலாளர் ஆனணயர் உமாதேவி, தொழிலாளர் இணை ஆணையர்-2 வேல்முருகன் ஆகியோரின் அறிவுறுத்தல்படியும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள்,  உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்க திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து தொழிலாளர்கள், பொதுமக்கள் செல்போன்களில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் பிரான்சிஸ் சேவியர் -  8072100968, ஆறுமுகம் -  9842584526, சிவவாக்கியம் -  8072309717, சுகந்தி -  9176983332 ஆகியோரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.  

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: