பெரம்பலூர் பஸ் நிலையத்தில் திருச்சியிலிருந்து சென்னை சென்ற அரசு பஸ் நடத்துனர் மாரடைப்பால் சாவு

பெரம்பலூர், ஏப்.1:திருச்சியில் இருந்து நேற்று காலை 6.15மணிக்கு புறப்பட்டு சென்னை நோ க்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருச்சி தீரன் மாநகர், மணி கண்டம், சட்லஜ் சாலையில் வசிக்கும் தில்லை பத்தர் மகனான டிரைவர் பாலு (54) என்பவர், அரசு பஸ்சை ஓட்டி வந்தார். திருச்சி போலீஸ் காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விமல் பாபு (45) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். பஸ் பெரம்பலூர் புது பஸ்டாண் டுக்கு காலை 8மணிக்கு வந்துள்ளது. அங்கு டீக்கடை முன் நின்று கொண்டிருந்த கண்டக்டர் விமல் பாபுவுக்கு திடீரென கடு மையான நெஞ்சு வலி ஏற் பட்டுள்ளது. இதனை விமல் பாபு, டிரைவர் பாலுவிடம் தெரிவிக்கவே, உடனே 108 ஆம்புலென்ஸ் வரவழைத்து பெரம்பலூர் அரசுத் த லைமை மருத்துவமனை க்கு கொண்டு செல்லப்பட்டு விமல் பாபுவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் ரத்தக்குழாய் அடைப்பு இருந்ததால் கடுமையான வலியுடன் சுயநினைவு இல்லாமலேயே இருந்த விமல்பாபு 9.15மணி க்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து அரசுப் போக்குவரத்து கழக திருச்சி (புறநகர்) கோட்ட மேலாளர் பாலு, பெரம்பலூர் கோட்ட மேலாளர் ராமநாதன், கிளை மேலாளர் ஞானமூர்த்தி, உதவிப் பொறியாளர் மனோஜ், பரிசோதகர் மதி யழகன் ஆகியோர் நேரில் சென்று விமல்பாபுவின் சட லத்திற்கு அஞ்சலி செலுத்தினர். அரசு பஸ் கண்டக் டர் இறந்த காரணத்தால் அந்த பஸ்சில்வந்த பயணி கள் அனைவரும் மாற்று பஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு பஸ் கண்டக்டர் பணி யில் இருக்கும் ஹார்ட் அட் டாக் மூலம் இறந்த சம்பவம் பெரம்பலூர் திருச்சி மாவட் டங்களில் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

Related Stories: