மசக்காளிபாளையத்தில் மநீம வேட்பாளர் டாக்டர் மகேந்திரன் பிரசாரம் கோவை வடக்கு தொகுதியில் வ.ம.சண்முகசுந்தரம் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை, மார்ச் 31:  கோவை வடக்கு தொகுதி மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் வடவள்ளி வ.ம.சண்முகசுந்தரம் வடவள்ளி பேருந்து முனையத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘எனது பரம்பரை சொத்து மதிப்பு என்ன? என்று தேர்தல் அலுவலகத்தில் கொடுத்து உள்ளேன். கடந்த 4 வருடத்தில் திடீர் பணக்காரன் ஆனவன் கிடையாது. வடவள்ளியில் 5 ஆண்டுகளில் ஐம்பது ஆண்டுகாலம் வளர்ச்சியை கொடுத்து உள்ளோம் என்று பேசி வருகின்றனர். உங்களது 5 தலைமுறைக்கு மட்டும் சொத்து சேர்த்து வைத்து உள்ளீர்கள். என்ன தொழில் செய்தீர்கள் இவ்வாறு சொத்து சேர்க்க. 45 ஆண்டு கால என் அரசியல் பயணம். உங்களுடைய வயது என் அனுபவம். பரிசு பொருட்கள் கொடுப்பவர்கள் நேர்மையாக வந்த பணத்தில் கொடுக்க மாட்டார்கள். கொரோனா காலத்தில் வடவள்ளியில் 100 ரூபாய்க்கு விற்க வேண்டிய மதுவை 1000 ரூபாய்க்கு கள்ளத்தனமாக விற்று காசு பார்த்தவர்கள் இங்கு உண்டு. ரேஷன் கடை அரிசியை திருடி அதில் அன்னதானம் வழங்கியது இந்த பகுதி மக்கள் அனைவருக்கும் தெரியும்.

பொம்மணம்பாளையம் குட்டை தூர்வாருவது என்ற பெயரில் கிணறு தோண்டி மண்ணை விற்பனை செய்தவர்கள் உண்டு. எந்த தொழிலாக இருந்தாலும் சரி அதில் தலையிட்டு அனைத்து தொழிலையும் முடக்கி சர்வாதிகாரம் செய்து வருவதை இப்பகுதி மக்கள் நன்கு அறிவார்கள். எனவே இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். உங்களில் ஒருவன் இந்த மண்ணின் மைந்தன் நான். எனக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் அளித்து பெரும் வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்’’ என்றார். பிரசாரத்தில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் குப்புசாமி, துரைசாமி, தெய்வம் மகாலட்சுமி, ராஜா, வேலுச்சாமி, தமிழ்மறை, ராஜ்குமார், ஜெயசூரியா, காங்கிரஸ் ரங்கநாதன், காந்தி, மதிமுக செல்வராஜ், கம்யூனிஸ்டு கட்சி ஜேம்ஸ் மணி, கொமதேக ராமகிருஷ்ணன், பிரேம், ரவி உள்ளிட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: