மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வழக்கு கலெக்டர் பதிலளிக்க உத்தரவு

மதுரை, மார்ச் 31: மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கக் கோரிய வழக்கில் கலெக்டர் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  நெல்லையைச் சேர்ந்த முருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘நெல்லை விஜயநாராயணம் பெரியகுளம் கண்மாய்க்கு மணிமுத்தாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் கண்மாய் நிரம்புகிறது. அரசாணைப்படி அணையில் இருந்து கடந்தாண்டு டிச.1 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.  

ஆனால், தடுப்பணை மண் சரிவால் ஜன.5 முதல் 14 வரை 10 நாட்கள் தண்ணீர் திறக்கவில்லை.  இதற்காக கூடுதலாக 10 நாட்கள் தண்ணீர் திறந்து விட வேண்டுமென உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், மனுவிற்கு நெல்லை கலெக்டர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 9க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: