திருத்தணி ஒன்றியத்தில் கோ.அரி தீவிர பிரசாரம்

திருத்தணி, மார்ச் 31: திருத்தணி தொகுதி அதிமுக வேட்பாளர் கோ.அரி நேற்று திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட தரணிவராகபுரம், எம்.ஜி.ஆர்.நகர், ராகவேந்திரா நகர், தெக்கலூர், சூரியநகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் மாலை, சால்வை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.  அப்போது, அதிமுக வேட்பாளர் கோ.அரி பேசியதாவது, “அதிமுக ஆட்சி மீண்டும் வந்தால் மக்களுக்கு வாஷிங்மெஷின், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர், அனைத்து வீடுகளுக்கும் இலவச கேபிள் இணைப்பு வழங்கப்படும். எனவே, அதிமுக தேர்தல் அறிக்கை அனைத்தும் நிறைவேற்ற எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்,” என்று கேட்டுக்கொண்டார்.

இந்த வாக்குசேகரிப்பில் திருத்தணி ஒன்றிய செயலாளர் இ.என்.கண்டிகை ரவி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆவின் பால்வள தலைவர் வேலஞ்சேரி த.கவிச்சந்திரன், நிலவள வங்கி தலைவர் டி.எம்.சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் வேலஞ்சேரி பழனி, முன்னாள் கவுன்சிலர் கேபிள் சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராகவன், தரணிவராகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் குப்பன், வழக்கறிஞர்கள் சுதா, பிரியன், பிச்சைமணி, சேட்டு, பொன்னுசாமி, பாமக வடக்கு ஒன்றிய செயலாளர் கௌதமன், தமாகா வட்டார தலைவர் கிருஷ்ணமராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: