கோவில்பதாகையில் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டுவர பாடுபடுவேன்: திமுக வேட்பாளர் ஆவடி நாசர் வாக்குறுதி

ஆவடி, மார்ச் 30: ஆவடி தொகுதி திமுக வேட்பாளரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 3,4,5 ஆகிய வார்டுகளில் திறந்த ஜீப்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆவடி வடக்கு நகர செயலாளர் ஜி.நாராயணபிரசாத் தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து அழைத்து சென்றனர். அப்போது, வேட்பாளர் ஆவடி நாசர் பேசியதாவது, “ராஜிவ்காந்தி நகர், கலைஞர் நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தினந்தோறும் லாரிகள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சப்ளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ராஜிவ்காந்தி நகர் உள்ள சுடுகாட்டில் எரிமேடை, மின்விளக்கு, தண்ணீர், சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன்.  கோவில்பதாகையில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்துவேன். அங்கு சமுதாயக்கூடம் கட்டிக் கொடுப்பேன். கோவில்பாதாகை ஏரியை தூர்வாரி ஆழப்படுத்துவேன். அங்குள்ள கரைகளை சீரமைத்து நடைபாதை அமைத்து கொடுப்பேன். மேற்கண்ட பகுதிகளில், பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வருவேன்,”என்றார்.

இதில் திமுக மாணவரணி இணைச்செயலாளர் பூவை ஜெரால்டு, மாவட்ட துணைச்செயலாளர் ஜெ.ரமேஷ்,  மதிமுக தேர்தல் பணிச்செயலாளர் வக்கீல் அந்தரிதாஸ், மாநில விவசாய பிரிவு தலைவர் எஸ்.பவன்குமார், மாநகர தலைவர்கள் இ.யுவராஜ், ஏ.ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன், மதிமுக மாநகரச்செயலாளர் எஸ்.சூரியகுமார், விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதி செயலாளர் மு.ஆதவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் பூபாலன், ராஜன், மயில்வாகனன், ராமானுஜம், திமுக மாவட்ட பிரதிநிதி பாதாகை சிங்காரம், ஆவடி வடக்கு நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, துரைராஜ், சித்ராவிநாயகம், ஜான் ரொசாரியோ, கா.மு.ஜான், வட்டச்செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரவிச்சந்திரன், மதிசெல்வம், நரேஷ், ஜெயந்தன், ரமேஷ்பாபு, பார்த்திபன், தமிழ்வாணன்  உள்பட முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories: