நயினார்கோவில் ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படும் திமுக வேட்பாளர் முருகேசன் வாக்குறுதி

பரமக்குடி, மார்ச் 30:  பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முருகேசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று நயினார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட, பாப்பர்கூட்டம், தாளையடிகோட்டை, இராதபுளி, காடர்ந்தகுடி,முத்துப்பட்டினம், வரவணி,  மூவலூர், உதயகுடி, நகமங்கலம், கீரம்பாண்டி கொட்டகுடி, நகரம், பனிதவயல், அரியங்கோட்டை, ஏந்தல், வா.தவனேரி, ஆரம்பக்கோட்டை உள்ளிட்ட பல கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இவருக்கு வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பு அளித்தனர்.

அப்போது மக்கள் மத்தியில் முருகேசன் பேசுகையில், ‘திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் தொகுதிக்கு கொண்டு வந்து சேர்ப்பேன். நாகநாதசுவாமி கோயில் அமைந்துள்ள நயினார் கோவிலை சுற்றுலாத்தலமாக மாற்றுவேன். நயினார்கோவிலில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். நயினார்கோவிலலை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க நடவடிக்கை எடுப்பேன். நயினார்கோவிலில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அனைத்து மருத்துவ வசதிகளும் உடைய மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். விவசாய பொருட்களை பதப்படுத்த குளிரூட்டப்பட்ட பண்டக சாலை அமைக்கப்படும்’ என்றார். பிரசாரத்தில்  முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சுந்தரராஜன், பரமக்குடி தொகுதி பொறுப்பாளர் திசைவீரன், மாநில தீர்மான குழு துணை தலைவர் சுப.த.திவாகரன், முன்னாள் மாநில இளைஞரணி துணை செயலாளர் சுப.த.சம்பத் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரகுரு, மன்னார்குடி.  ஒன்றிய செயலாளர் வேலாயுதம், ஒன்றிய கவுன்சிலர் கவிதா குமரகுரு, ஒன்றிய கவுன்சிலர் நாகநாதன், மணிவண்ணன், தொமுச அரசு மணி, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாகராஜன், வளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: