உதயசூரியன் சின்னம் தெளிவாக அச்சிடவில்லை திமுக தரப்பில் புகார்

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில், மின்னணு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது. அப்போது, திமுகவின் சின்னமான உதயசூரியன், தெளிவாக அச்சிடப்படவில்லை என திமுக தரப்பினர் புகார் தெரிவித்தனர். திட்டமிட்டு உதயசூரியன் சின்னத்தை தெளிவின்றி அச்சிட்டிருப்பதாக குற்றம் சாட்டினர்.

அதேபோல், ஒப்புகை ரசீது இயந்திரத்திலும் உதயசூரியன் சின்னம் தெளிவின்றி அச்சாவதாக தெரிவித்தனர். எனவே, சின்னங்கள் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு வந்த கலெக்டர் சந்தீப் நந்தூரி இது தொடர்பாக விசாரணை நடத்தினார். ேதர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படிதான், சின்னங்கள் உரிய அளவில் அச்சிடப்பட்டுள்ளது. அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என விளக்கினார். மேலும், ஒப்புகை ரசீது இயந்திரங்களில் தொழில்நுட்ப சிக்கலை சரி செய்து, உதயசூரியன் சின்னம் தெளிவாக அச்சாவதை பெல் நிறுவன ஊழியர்கள் உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து, மின்னணு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடர்ந்து நடந்தது.

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரங்களில் நேற்று வேட்பாளர்களின் பெயர், படம் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடந்தது. அப்போது, திமுகவின் உதயசூரியன் சின்னம் தெளிவாக அச்சிடப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: