பல திட்டங்களை நிறைவேற்ற என்னை வெற்றி பெற செய்யுங்கள் திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் பிரசாரம்

திருச்சி, மார்ச் 26: திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கடந்த ஒரு வாரமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லுக்குழி பகுதியான முடுக்குப்பட்டி, சேதுராமன் பிள்ளை காலனி பகுதிகளில் வீதி வீதியாக சென்று அதிமுகவின் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வினியோகித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கூறினார். பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் தொகுதியில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500, 6 இலவச காஸ் சிலிண்டர் வழங்கப்படும். கூட்டுறவு வங்கியில் 6 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி, மகளிர்குழு கடன் தள்ளுபடி போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்படும். எனவே மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை மீண்டும் வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.

Related Stories: