தூத்துக்குடி தொகுதி மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவேன் எஸ்டிஆர் விஜயசீலன் உறுதி

தூத்துக்குடி, மார்ச் 26: தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலனுக்கு விஸ்வகர்மா சங்கம் ஆதரவு அளித்துள்ளது. இதையடுத்து சங்க நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து வெற்றிபெற ழ்த்துத்தெரிவித்தனர். முன்னதாக பேசிய விஜயசீலன் தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைளையும் நிறைவேற்றித் தருவேன் என உறுதியளித்தார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில்  தமாகா வேட்பாளராக எஸ்.டி.ஆர். விஜயசீலன் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் அவர், நேற்று காலை கோமதிபாய் காலனி, குட்டி சங்கரபேரி, ஸ்டேட் பேங்க் காலனி, சக்தி விநாயகர்புரம், எழில்நகர், கந்தசாமிபுரம், அம்பேத்கர்நகர், சுந்தரவேல்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில் ‘‘ மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் வலிமையான இந்தியாவை உருவாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மத்திய அரசுடன் இணக்கமான ஆட்சி நடந்தால்தான் வளமான தமிழகமாக உருவாக்க முடியும். தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் கொள்கையும் வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பதுதான். எனவே தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நல்லாட்சி தொடர எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள். அதிமுக ஆட்சி மீண்டும் மலர்ந்ததும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.1500. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டி உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் வழங்கப்படும். தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைளையும் நிறைவேற்றித் தருவேன்’’ என்றார்.

 பிரசாரத்தில் அதிமுக பகுதிசெயலாளர் பொன்ராஜ், வட்டச்செயலாளர் முருகன், நிர்வாகிகள் சொக்கலிங்கம், அன்னபாக்கியம், ராஜகண்ணா, இன்பராஜ், ஜோதிமணி, பாஜ சார்பில் மாவட்ட தலைவர் பால்ராஜ், நிர்வாகிகள் செல்லப்ப்பா, மனோகரன், கனகராஜ், வினோத், தமாகா சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், மாநகர தலைவர் ரவிக்குமார், மாணவரணித் தலைவர் பொன்ராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

 முன்னதாக தமாகா வேட்பாளர் விஜயசீலனை தேர்தல் காரியாலயத்தில் விஸ்வகர்மா சங்க நிர்வாகிகள் கமல்ஹாசன் தலைமையில் சந்தித்துஆதரவு தெரிவித்தனர். அவர்களுக்கு விஜயசீலன் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

Related Stories: