சாத்தான்குளம் பகுதியில் 2வது நாளாக அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் வீதிவீதியாக தீவிர வாக்கு சேகரிப்பு

சாத்தான்குளம், மார்ச் 26: சாத்தான்குளம் பகுதியில் 2வது நாளாக அதிமுக வேட்பாளர் சண்முகநாதன்  வீதிவீதியாகச்சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.வைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளரான தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன், சாத்தான்குளம் பகுதியில் நேற்று 2வது நாளாக தீவிர பிரசாரம் மேற்கொண்டார். சாத்தான்குளம் தவசியாபுரத்தில் இருந்து திறந்த வேனில் நின்று பிரசாரத்தை தொடங்கிய அவர் பண்டாரபுரம், விஜயனூர், விஜயராமபுரம், சுப்பிரமணியபுரம், பொத்தகாலன்விளை, போலையர்புரம், நடுவக்குறிச்சி, வடக்கு, தெற்கு ராமசாமிபுரம், பூவுடையார்புரம், பூச்சிக்காடு, தட்டார்மடம், கொம்மடிக்கோட்டை, சொக்கன்குடியிருப்பு, உசரத்துக்குடியிருப்பு, செட்டிவிளை, படுக்கப்பத்து, அழகப்பபுரம், பிச்சிவிளை, சுண்டங்கோட்டை, பள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசுகையில் ‘‘சாத்தான்குளம் பகுதியில் மக்கள் எதிர்பார்த்ததை விட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமி ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தியுள்ளார். கிராமபுற பெண்களின் கஷ்டங்களை உணர்ந்து பெண்களுக்கு வாஷிங் மிஷின், ஆண்டுக்கு  6 காஸ் சிலிண்டர்  இலவசம் என அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு பல கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். இப்படி நல்ல  திட்டங்களை தந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக இந்த தொகுதியில் போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்’’ என்றார்.

 நிகழ்ச்சிகளில் அதிமுக மாவட்ட அவைத்

தலைவர் திருப்பாற்கடல், ஒன்றியச்  செயலாளர் அச்சம்பாடு சவுந்திரபாண்டி, ஜெ. பேரவை மாவட் ட இணைச் செயலாளர் தட்டார்மடம் ஞானபிரகாசம், மாவட்ட கவுன்சிலர் தேவவிண்ணரசி, ஒன்றிய துணை சேர்மன் அப்பாத்துரை, இளைஞர் அணி ஒன்றியச் செயலாளர் பாலகிருஷ்ணன், ஜெ. பேரவை ஒன்றியத் தலைவர் சின்னத்துரை, எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச்செயலாளர் பொன்பாண்டி, சாத்தான்குளம் நகரச் செயலாளர் குமரகுருபரன், நடுவக்குறிச்சி முன்னாள் பஞ்.தலைவர் ஆனந்தகுமார், முன்னாள் துணை சேர்மன் ஜெயராணி,  தமாகா மகளிர் அணி மாவட்டத் தலைவி தங்கத்தாய், பாஜ மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணைத்தலைவர் கணேசன், வைகுண்டம் தொகுதி பொறுப்பாளர் சித்ராங்கதன், ஒன்றிய தலைவர் செந்தில், மருத்துவ அணி மாவட்டச் செயலாளர் பூபதி பாண்டியன், வர்த்தக பிரிவு மாவட்டச் செயலாளர் பரமசிவன்,  விவசாய பிரிவு ஒன்றிய தலைவர் சரவணபாண்டி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: