பரமக்குடி நகர் பகுதியில் வீதி வீதியாக சதன் பிரபாகர் பிரசாரம்

பரமக்குடி, மார்ச் 25:  பரமக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர், பரமக்குடி நகர் பகுதியில் உள்ள 19,20,21 ஆகிய வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பெண்களுக்கு தாலிக்கு தங்கம், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியம், நெசவாளர்களுக்கு ரிபெட் ரூ.11 கோடி வழங்கியது. கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு இலவச லேப்டாப், 2ஜிபி நெட் கார்டு, கல்லூரி மாணவ-மாணவிகள் கொரோனா காலகட்டங்களில் ஆல் பாஸ் வழங்கிய அதிமுக அரசுக்கு  மீண்டும் வாக்களிக்க வேண்டும் என கூறினார். பின்னர் பரமக்குடி ஒன்றியம் சோமநாதபுரம், நடுப்பட்டி,பொதுவக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, நகர செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், பரமக்குடி ஒன்றிய செயலாளர் முத்தையா, மாவட்ட துணைச் செயலாளர் பாதுஷா, பரமக்குடி ஒன்றிய குழு துணை தலைவர் சரயு ராஜேந்திரன், பார்த்திபனூர் நகர் செயலாளர் வினோத், பரமக்குடி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப செயலாளர் துரை ராமநாதன், மாவட்ட மாணவர் அணி பொருளாளர் யோக மணிகண்டன், நகர அம்மா பேரவை துணைச் செயலாளர் கார்த்திக், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப நிர்வாகி இந்திரன், ஒன்றிய மாணவரணி செயலாளர்  முத்துக்குமார் உள்ளிட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: