திருவில்லிபுத்தூர், மார்ச் 24: திருவில்லிபுத்தூர் தொகுதியில் 30 வாக்குசாவடிகள் பதற்றமானவை எனவும், 2 வாக்குச்சாவடிகள் மிகவும் ஆபத்தானவை எனவும், தேர்தல் அதிகாரி முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘திருவில்லிபுத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 357 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் 30 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை. இதன்படி, டிஇஎல்சி மிடில் ஸ்கூல் ராமசாமியாபுரம் பள்ளியில் உள்ள 2 வாக்குசாவடிகள். கூமாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள இரண்டு வாக்குசாவடிகள், ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளி கோட்டையூர் பகுதி இரண்டு வாக்குச்சாவடிகள், ஆர்.சி நடுநிலைப்பள்ளி வ.புதுப்பட்டியில் உள்ள இரண்டு வாக்குசாவடிகள், திருவில்லிபுத்தூர் திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு வாக்குசாவடிகள் உள்ளிட்ட 30 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.