எல்ஐசி ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து முகவர்கள் வேலை நிறுத்தம், தர்ணா போராட்டம்

பெரம்பலூர்,மார்ச் 24: பெரம்பலூர் மாவட்டத்தில் எல்ஐசி முகவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். எல்ஐசி முகவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும், எல்ஐசியின் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், எல்ஐசி அறிமுகப்படுத்தும் புது பாலிசிக்கான ஆன்லைன் வர்த்தகத்தைக் கண்டித்து நேற்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் முடிவு செய்திருந்தது.

இதன்படி பெரம்பலூர் எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு கட்டமாக பெரம்பலூர் எல்ஐசி கிளை அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கோட்ட துணை தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். கிளை தலைவர் காமராஜ் முன்னிலை வகித்தார். இதில் 150க்கும் மேற்பட்ட எல்ஐசி முகவர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் நேற்று எல்ஐசி முகவர்கள் புது வணிகம் செய்யாமலும், எல்ஐசி தவணை தொகை செலுத்துதல், காப்பீடு பெற்றுத்தருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.

Related Stories: