சமக வேட்பாளரை ஆதரித்து தூத்துக்குடியில் ராதிகா பிரசாரம்

தூத்துக்குடி,மார்ச்23:  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சமக வேட்பாளர் சுந்தரை ஆதரித்து கட்சியின் முதன்மை துணை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அவர் தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரசாரத்தை துவக்கினார். தூத்துக்குடி தேரடி திடலில் அவர் பேசுகையில்: எங்கள் கூட்டணி ஒரு மாற்றத்தை உருவாக்கும். எல்லா விஷயத்திலும் மாற்றம் முக்கியம். அப்போது தான் நாடு முன்னேறும். அதிமுகவின் பெரிய ஆளுமை கொண்ட தலைவி தற்போது இல்லை. இதனால் அவர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்தும் இலவசமாக தருவதாக கூறுகிறார்கள்.

எங்கள் தலைவர் சரத்குமார், மக்களுக்கு மீன்பிடிக்க கற்றுகொடுக்க வேண்டும் என்றால் அதற்காக தூண்டில் வாங்கி கொடுக்கலாம் என்று கூறுவார். மீனை பிடித்து கொடுத்தால் நீங்கள் எப்படி முன்னேறுவீர்கள். அதே போன்று கூட்டணியில் உள்ள கமல்ஹாசன் சிறந்த நடிகர். முற்போக்கு சிந்தனை கொண்டவர். மக்கள் பணியை அவர் தனது கடமையாக கருதி அரசியலுக்கு வந்துள்ளார். அவர் நிச்சயம் நல்லது செய்வார். தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டும். அது தூத்துக்குடியில் இருந்து துவங்கட்டும். எனவே நீங்கள் வேட்பாளர் சுந்தருக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

Related Stories: