நெல்லை தொகுதியில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்

நெல்லை, மார்ச் 23:  நெல்லை தொகுதியில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மானூர் வடக்கு ஒன்றிய பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறுதியளித்தார்.  நெல்லை சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜ சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன், தொகுதிக்குட்பட்ட இடங்களில் சூறாவளி பிரசாரம் செய்து வாக்குசேகரித்து வருகிறார்.

நேற்று காலை நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 44வது  வார்டு மற்றும் 51, 52, 53 வார்டு பகுதிகளில் பிரசாரம் செய்தார்.  டவுன் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோயில் தெருவில் இருந்து  பிரசாரத்தை தொடங்கிய நயினார் நாகேந்திரன், பாட்டப்பத்து தெற்கு மவுண்ட் ரோடு,  தொட்டி பாலத்தெரு, தடிவீரன் கோயில் தெரு, கீழத்தெரு, ஜெயப்பிரகாஷ் தெரு,  காட்சி மண்டபம் பகுதி, ஜாமியா பள்ளிவாசல் தெரு, செங்குந்தர் தெரு, வேம்படி தெரு, திரிபுரசுந்தரி அம்மன் கோயில் தெரு, கரியமாணிக்க பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட  பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று தாமரை  சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

மாலையில் மானூர் வடக்கு ஒன்றிய பகுதிகளான உக்கிரன்கோட்டை, வாகைகுளம், அழகியபாண்டியபுரம் பகுதிகளில் வீடு வீடாக சென்று தாமரை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது நயினார் நாகேந்திரன் பேசுகயைில், உங்கள் வீட்டு பிள்ளையாகிய என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தாமரை சின்னத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். நெல்லை தொகுதி மக்களின் நலன்காக்க பாடுபடுவேன். படித்த இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். பள்ளமடை, மானூர் குளங்கள் நீர்வரத்து பாதைகள் சீரமைக்கப்படும். மத்திய அரசின் முத்ரா திட்டம், அனைவருக்கும் வீடு, விவசாய காப்பீடு, அனைவருக்கும் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட திட்டங்களால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். அதிமுக அரசின் மக்கள் நல திட்டங்கள் பல செயல்பாட்டில் உள்ளது. மக்கள் நல திட்டங்களை ெதாடர்ந்து செயல்படுத்த என்னை வெற்றி பெறச் செய்யுங்கள், என்றார்.

பிரசாரத்தில் அதிமுக அமைப்பு  செயலாளர் சுதா பரமசிவன், நெல்லை பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை  செல்லத்துரை, பகுதி செயலாளர்கள் மோகன், காந்தி வெங்கடாசலம், எம்ஜிஆர்  மன்ற துணை தலைவர் சந்திரசேகரன், பூக்கடை நல்லகண்ணு,  பாஜ மாநில  வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி பாலாஜி கிருஷ்ணசாமி, அன்புராஜ் மணிகண்ட  மகாதேவன், மண்டல தலைவர் ஆனந்தராஜ், சங்கர், முருகன், மகளிரணி  மாரியம்மாள், ெசல்வபிரியா உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories: