ஊட்டி,மார்ச்22: ஊட்டி தமிழகம் மாளிகையில் கோடை சீசனை முன்னிட்டு நடவு செய்யப்பட்ட மலர் செடிகளை பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலாதலங்கள் நிறைந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்கு தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்டவைகள் உள்ளன. கோடை சீசனின் போது வர கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு இப்பூங்காக்களில் பல்வேறு வகை மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படும். இதேபோல் ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகை பூங்காவிலும் தோட்டக்கலை துறை சார்பில் கோடை சீசனை முன்னிட்டு மலர் செடிகள் நடவு செய்யப்படுவது வழக்கம்.