புதுக்கோட்டையில் வானிலை ஆய்வு கருத்தரங்கம்

புதுக்கோட்டை, மார்ச் 18: புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் சேவை மைய கட்டிடத்தில்சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வானிலை ஆய்வுத்துறை சார்பில் விவசாயிகளுக்கான வானிலை ஆய்வு பற்றிய கருத்தரங்கம் நடந்தது. இதில் வானிலை சார்ந்த வேளாண்மை முன்னறிவிப்பு செய்திகளை எப்படி பெறுவது, மழைநீர் சேகரிப்பு, இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு, ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகளின் பயன்பாட்டை குறைத்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் போன்றவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.  மேலும் இந்திய வானிலைத்துறையின் மேக்தூத் மற்றும் டாமினி கைபேசி செயலிகளின் பயன்பாடு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் விவசாயிகளின் அலைபேசிக்கு நேரடியாக வானிலை முன்னறிவிப்பு மற்றும் வேளாண் ஆலோசனை வழங்கப்படுகிறது என்று சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட இயக்குனர் தேவராஜ் விளக்கம் அளித்தார். சிறப்பு விருந்தினராக ராஜ்குமார் பங்கேற்று விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு விளக்கம் அளித்தார். மேலும் சுவாமிநாதன்ஆராய்ச்சி நிறுவனம் மூலம் இலவசமாக விவசாயம் மற்றும் கால்நடை ஆலோசனை வழங்கப்படுவதற்கான அலைபேசி எண்களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தினார்.

Related Stories: