தி.பூண்டியிலிருந்து பழையபடியே இடும்பாவனம் பகுதிக்கு பஸ் இயக்க வலியுறுத்தல் திருத்துறைப்பூண்டி,

மார்ச் 15: திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து கிளை மேலாளருக்கு கட்டிமேடு சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் அனுப்பி உள்ள கோரிக்கை மனு:  திருத்துறைப்பூண்டியிலிருந்து பாண்டி, கீழப்பெருமழை வழியாக இடும்பாவனம் பகுதிக்கு 1977ம் ஆண்டு முதல் காலை 6.30, 9.15, மதியம் 12.30, 3.30, மாலை 6.30, இரவு 9.30 மணி நேரங்களில் டவுன் பஸ்சாக இயங்கி வந்தது. பின்னர் புறநகர் பஸ்சாக மாற்றி இதே நேரங்களில் இயங்கிவந்தது. ஆனால், இப்போது காலை, மாலை இரண்டு வேளை மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது. இதேபோல் இடும்பாவனத்திலிருந்து திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு இரண்டு முறை பஸ் இயக்கப்பட்டது.  இதேபோல் திருத்துறைப்பூண்டியிலிருந்து பெத்தல கோட்டம் பகுதிக்கு காலை, மாலை, இரவு என 3 முறை சென்ற பஸ் தற்போது ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது.

இந்த பகுதியில் உள்ள 6 ஊராட்சிகளில் சுமார் 16,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் திருத்துறைப்பூண்டியில் உள்ள வங்கிகள், அரசு மருத்துவமனைக்கு செல்லவும் வேறு மாவட்டங்களுக்கு சென்று திரும்பவும் சரியான நேரத்திற்கு பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே தங்கள் கிளையிலிருந்து பழையபடி பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: