- அண்ணாமலை நகர்
- திருவோத்ரியூர்
- அண்ணாநகர்
- ராமசாமி நகர்
- பாலகிருஷ்ணா நகர்
- கார்கில் வெற்றி நகர்
- ராஜாஜி நகர்
- திருவோத்ரியூர், சென்னை
- திருவோத்ரியூர்…
திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதியில் அண்ணாமலை நகர், அண்ணா நகர், ராமசாமி நகர், பாலகிருஷ்ணா நகர், கார்கில் வெற்றி நகர் மற்றும் ராஜாஜி நகர் உள்ளிட்ட 20க்கும் பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வந்து செல்ல திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே உள்ள கிராம தெரு-அண்ணாமலை நகரை இணைக்கும் ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றனர்.
இந்த வழியாக அடிக்கடி மின்சார ரயில், விரைவு ரயில்கள் செல்லும் சமயத்தில் கேட் மூடப்படுவதால் வாகனங்களில் செல்கின்றவர்கள் மற்றும் நடந்துசெல்கின்றவர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். ரயில் கேட் மூடப்பட்டுள்ள சமயத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்கின்றவர்கள் காலதாமதம் ஆகிவிடும் என்பதால் கேட்டை தாண்டி செல்கின்றனர். அப்போது ரயில்களில் சிக்கி பாதிக்கப்பட்டு விடுகின்றனர். இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று அண்ணாமலை நகர் ரயில்வே கேட்டில் 28 கோடி ரூபாய் செலவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2022ம் ஆண்டு பணி துவக்கப்பட்டது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. தற்போது 30 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்று நிலையில் பல காரணங்களால் தொடர்ந்து நடைபெறாமல் உள்ளது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலைமையில் மக்கள் உள்ளனர்.
இந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தாலும் அவசர தேவைக்காக பொதுமக்கள் நடந்தும் சைக்கிள்களிலும் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். இதன்காரணமாக ரயில்கள் மோதி உயிரிழப்பு நடந்துள்ளதாக தெரிகிறது. இதனால் ரயில்வே கேட்டின் இரண்டுபுறமும் கான்கிரீட் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் பொதுமக்கள் வந்து, ‘’சுரங்கப்பாதை பணியை விரைவாக முடிக்காமல் பொதுமக்கள் நடந்துச்செல்லும் பாதியில் முற்றிலுமாக தடுப்புச்சுவர் அமைக்கக்கூடாது’’ என்று அண்ணாமலை ரயில்வே கேட்டில் ரயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதுபற்றி அறிந்ததும் செந்தில்குமார் எம்எல்ஏ வந்து பொதுமக்களிடம் பேசினார். பின்னர் அவர், ‘’சுரங்க பாதைப்பணியை முடிக்கவேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்துசெல்ல வசதி ஏற்படுத்தவேண்டும்’’ என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். ‘’ பணிகள் விரைந்துமுடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
