×

மார்க்கண்டேயன் கைதுக்கு தீவிரம் காட்டிய அரசுக்கு, ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ தெரியவில்லையா?.. கீதா ஜீவன் கேள்வி

 

தூத்துக்குடி: முதலமைச்சர் விஜயை விமர்சனம் செய்து பேசியதற்காக விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களை ஆளும் தவெக அரசின் அழுத்தம் காரணமாக காவல்துறை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மார்க்கண்டேயன் அவர்களை கைது செய்ய இவ்வளவு தீவிரம் காட்டிய அரசுக்கு ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அரசின் கண்களுக்கு தெரியவில்லையா அல்லது அவர் தவெக என்பதால் அவர் மீதுள்ள பாலியல் குற்றங்கள் மறைக்கப்பட்ட தூய சக்தி ஆகவே உள்ளாரா? மிசாவை எதிர்கொண்ட திமுக இந்த உருட்டல் மிரட்டலுக்கு அடி பணியாது. எதிர்க்கட்சியினரை குறிவைத்து பழிவாங்க இவ்வளவு தீவிரம் காட்டிய #reelsmodel அரசு கொஞ்சம் மக்கள் பாதுகாப்பிலும் காட்ட வேண்டும்.

ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு பதிலாக அடக்குமுறை அரசியல் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Markandeyan ,Srivaikundam ,MLA ,Geeta Jeevan ,Vlathikulam ,Dimuka ,Former Minister ,Vratathikulam ,
× RELATED டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மீது...