×

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்; ஆகஸ்ட் 30-ம் தேதி வரை 3 சுற்றுகளாக நடைபெறுகிறது

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. இந்த கலந்தாய்வு ஆகஸ்ட் 30-ம் தேதி வரை 3 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 13ம் தேதி நடைபெற்றது. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்த 137 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிறப்பு பிரிவினருக்கான இணையவழி பொது கலந்தாய்வு கடந்த 15ம் தேதி தொடங்கியது. இதில் 4,927 பேர் தகுதிபெற்றிருந்தனர்.

இக்கலந்தாய்வுக்கான இறுதி பணி 18ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 258 பேருக்கும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 416 பேருக்கும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 139 பேருக்கும் என மொத்தம் 813 பேருக்கு இட இதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று தொடங்கியுள்ள முதல் சுற்றில் பங்கேற்கும் மாணவர்கள் பாடப்பிரிவை தேர்வு செய்ய ஜூலை 22 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 418 கல்லூரிகளில் 1,98,825 இடங்கள் உள்ள நிலையில் 2.36 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Cut-off 200 முதல் 171.333 வரை வரையிலான மாணவர்கள் பொதுப்பிரிவு கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.

Tags : Chennai ,
× RELATED மாமல்லபுரத்தில் 29ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம்