×

உடன்குடி கருப்பட்டி வியாபாரிகள் 5 பேருக்கு ரூ.38 கோடி அபராதம் விதித்த ஜி.எஸ்.டி அதிகாரிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கருப்பட்டி வியாபாரிகள் 5 பேருக்கு ஜி.எஸ்.டி அதிகாரிகள் ரூ.38 கோடி அபராதம் விதித்தனர். கடந்த 6 ஆண்டுகளாக கருப்பட்டியில் சர்க்கரை கலந்து விற்று மோசடி செய்ததை அடுத்து ஜி.எஸ்.டி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு உள்ளது.

பனை தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு ஜி.எஸ்.டி. விலக்கு உள்ளது. ஆனால் பதநீரில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக சர்க்கரை கலந்து கருப்பட்டி தயாரித்ததால் அதற்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே உடன்குடியில் தான் சர்க்கரை மூட்டைகளை வியாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் உடன்குடியில் ஆய்வு செய்தனர். உடன்குடியில் கடந்த சில வாரங்களில் வியாபாரிகள் ரூ.5 கோடிக்கு சர்க்கரை மூட்டைகளை கொள்முதல் செய்தனர். இந்த நிலையில் பதநீரில் 60 முதல் 70 சதவீதம் சர்க்கரை கலந்து கருப்பட்டி தயாரிக்கப்பட்டதை ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர். 6ஆண்டுகளாக முறைகேட்டில் ஈடுபட்ட 5 கருப்பட்டி வியாபாரிகளுக்கு அதிகாரிகள் ரூ.38 கோடி அபராதம் விதித்தனர்.

Tags : GST ,Udangudi ,Thoothukudi ,Udangudi, Thoothukudi district ,
× RELATED மாமல்லபுரத்தில் 29ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம்