திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் மலை உச்சியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமியை தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை, வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி முருகன் கோயில் ரோப் கார் சேவை இன்று முதல் அடுத்த 45 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பக்தர்கள் செப்டம்பர் 14ஆம் தேதி வரை ரோப் கார் சேவையை பயன்படுத்த முடியாது. செப்டம்பர் 15ஆம் தேதி வரை முதல் வழக்கம் போல் பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை, வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 20 முதல் செப்டம்பர் 14 வரை 45 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக, இந்த ரோப் கார் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை (மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை இடைவேளையுடன்) இயக்கப்படும்.
பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. குறீப்பாக, படிக்கட்டுகள், யானைப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது, பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவைகள் நிறுத்தப்படுவதாக வழக்கம்.
அந்த வகையில், கோயில் நிர்வாகம் தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி முருகன் கோயில் ரோப் கார் சேவை இன்று முதல் அடுத்த 45 நாட்களுக்கு இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வழக்கமாக ஆண்டுக்கு 45 நாட்களும், மாதந்தோறும் ஒரு நாட்களும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜூலை மாதம் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை இன்று (ஜூலை 20) முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14ஆம் தேதி வரை ரோப் கார் சேவை இயங்காது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
