சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. ஆகஸ்ட் 30-ம் தேதி வரை 3 சுற்றுகளாக நடைபெறும். முதல் சுற்றில் பங்கேற்கும் மாணவர்கள் பாடப்பிரிவை தேர்வு செய்ய ஜூலை 22 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 418 கல்லூரிகளில் 1,98,825 இடங்கள் உள்ள நிலையில் 2.36 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. Cut-off 200 முதல் 171.333 வரையிலான மாணவர்கள் பொதுப்பிரிவு கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.
