ஒருநாள், டி20 உலக கோப்பையில் அதிரடி மாற்றம்

துபாய்: ஒருநாள் மற்றும் டி20 உலக கோப்பைக்கான ஃபார்மேட்டில் ஐசிசி அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி முதல் 14 ரேங்க்கில் உள்ள அணிகள் ஒருநாள் உலக கோப்பையில் விளையாட தகுதிபெறும். அதில் கடைசி 3 அணிகள் தங்களுக்குள் சூப்பர் சீரீசில் விளையாடி, வெற்றி பெறும் அணி மற்ற 11 அணிகளுடன் இணையும்.

தலா 6 அணிகள் கொண்ட இரு பிரிவில் ரவுண்ட் ராபின் லீக் சுற்றும், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 அணிகள் மற்றும் அதற்கு அடுத்த ஒரு சிறந்த அணி என 7 அணிகள் சூப்பர் 7 ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் பலப்பரீட்சை நடத்தி, முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுக்கு தகுதி பெறும்.

டி20 உலக கோப்பையிலும் மொத்தம் 20 அணிகள் தலா 4 அணிகள் கொண்ட 5 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 அணிகள் சூப்பர் 10 சுற்றில் 2 பிரிவுகளாக மோத வேண்டும். இரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் 2 அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேற… 2வது, 3வது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் ஆட வேண்டும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறலாம்.

Related Stories: