தஞ்சாவூர் மாவட்டத்தில் அமாவாசையன்று அரசியல் கட்சியினர் பிரசாரம் துவக்கம்

தஞ்சை, மார்ச் 14: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், நேற்று அமாவாசை தினம் என்பதால் தங்களது தேர்தல் பிரசாரத்தை துவக்கினர்.அதிமுகவின் ஒரத்தநாடு, தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர்கள் நேற்று தஞ்சாவூரில் உள்ள பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர். கடந்த 10ம் தேதியே அதிமுகவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று அமாவாசை தினம் என்பதால் பிரசாரத்தை துவக்கினர். இதேபோல அமமுக, திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கட்சியின் மூத்த தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை துவக்கினர். திருவையாறு தொகுதி திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரன் கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டியும், பிரச்சாரத்தையும் துவக்கியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது

Related Stories: