பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் கைது

நாகப்பட்டினம்,ஜூலை 14: தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது. இதையடுத்து எஸ்பி கேழ்கர்சுப்ரமணியபாலசந்திரா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நாகப்பட்டினம் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே சந்தேகத்தின் பேரில் நின்றவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர் பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அரசப்பட்டு மேலதெருவைச் சேர்ந்த விக்னேஷ்கண்ணன்(46), என்பது தெரியவந்தது. இவர் மீது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையம், வாய்மேடு காவல் நிலையங்கள், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

Related Stories: