மதுவிற்ற 2 பேர் கைது

திருச்சி, ஜூலை 14: திருச்சி பாலக்கரை, தில்லைநகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பெயரில் ஜூலை 12ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆலம் தெரு அருகே மதுவிற்ற பாலக்கரை ஆழம் தெரு, செல்வ நாயகிபுரம் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (47) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.இதேபோன்று ஆழ்வார்தோப்பு கேஸ் குடோன் அருகே மதுவிற்ற சின்னசாமி நகரைச் சேர்ந்த முபாரக் (42) என்பவரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்த 35 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: