கஞ்சா விற்ற 2 பேர் கைது: 1050 கிராம் பறிமுதல்

மன்னார்குடி, ஜூலை 14: திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்களை பதுக்கி வைத்து சட்ட விரோத விற் பனையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது எஸ்பி சதீஷ்குமார் உத்தரவின் பேரில் போலீசார் கடும் நடவடிக் கை எடுத்து வருகின்றனர். அதன்படி, மன்னார்குடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் டிஎஸ்பி மணிவண்ணன் அறிவுறு த்தலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடு பட்டுள்ளனர்.இந்நிலையில், மன்னார்குடி – ஒரத்தநாடு சாலை நெடுவாக்கோட்டை கட்டேரி வாய்க்கால் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் தலைமையில் டவுன் எஸ்ஐ முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த மன்னார்குடி உப்புக்காரத் தெரு கோரிமேடு பகுதியை சேர்ந்த முருகன் (50) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

இதில், அவர் கஞ்சா விற்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிட மிருந்து 850 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றி, பைக்கையும் பறிமுதல் செய்தனர்.இதேபோல், மன்னார்குடி அந்தோனியார் கோயில் தெரூ அரசமரத்தடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப் படுவதாக வந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் தலைமையில் டவுன் எஸ்ஐ முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்ததில் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் அசேஷம் பகுதியை சேர்ந்த கதிர் (21) என்றும், அவர் கஞ்சா விற்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிட மிருந்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.பின்னர், இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை மன்னார்குடி மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Related Stories: