நாகப்பட்டினம், ஜூலை 14: வேளாங்கண்ணி அருகே விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.வேளாங்கண்ணியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக டிஎஸ்பி நிக்சனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் வேளாங்கண்ணி அருகே கருவேலங்கடை பகுதியில் சோதனை நடத்தினர். இதில் அப்பகுதியில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திருவாரூர் மாவட்டம் மருதப்பட்டினம் வசம்போடை தெருவை சேர்ந்த ஞானசேகரன்(55) என்பது தெரியவந்தது. மேலும் இவர் நாகப்பட்டினம் அருகே பாப்பா கோயில் புது தெருவை சேர்ந்த ஞானசுந்தரி(23) என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி விற்பனை செய்வதாக கூறினார். இது குறித்த வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 550 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.55 ஆயிரம் ஆகும்.
