கஞ்சாவுடன் இருவர் கைது

வடமதுரை, ஜூலை 14: வடமதுரையில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். வடமதுரை ரயில் நிலையம் பகுதியில் தலைமை காவலர் ரவீந்திரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது உபயோகத்திற்கு கஞ்சா வைத்திருந்த வடமதுரை அண்ணா நகரை சேர்ந்த சதீஷ்குமார் (27), சந்துரு (21) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: