சென்னை அருகே சோழிங்கநல்லூரில் அரசு பள்ளியில் புகுந்து தவெகவினர் அத்துமீறல் என புகார்

 

சென்னை: சென்னை அருகே சோழிங்கநல்லூரில் அரசு பள்ளியில் புகுந்து தவெகவினர் அத்துமீறல் என புகார் எழுந்துள்ளது. சந்தோஷபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தவெகவைச் சேர்ந்த 10 பேர் திடீரென புகுந்துள்ளனர். வகுப்பின் போது புகுந்த தவெகவினர், கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார். அரசு பள்ளிக்குள் சென்ற தவெகவினர் முதல்வர் விஜய் படத்தை மாட்டி ரீல்ஸ் எடுத்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இருக்க கூடிய அரசு பள்ளியில் சுமார் 10க்கு மேற்பட்ட தவெகவினர் இணைந்து முதலமைச்சர் விஜய் படத்தை மாட்டி பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு இடையூறு செய்துள்ளனர். வேங்கைவாசல் ஊராட்சி சந்தோஷபுரம் பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் சுமார் 10க்கு மேற்பட்ட தவெகவினர் பள்ளிக்குள் நுழைந்து வகுப்பறையில் முதலமைச்சர் விஜய் படத்தை மாட்டியுள்ளார்.

பள்ளி நேரத்தில் உள்ளே புகுந்து வேங்கைவாசல் தவெக ஒன்றிய கழக செயலாளர் பி.ராஜன் ஒன்றிய கழக இணை செயலாளர் மணி ஒன்றிய கழக துணை செயலாளர் விஜய் ஒன்றிய பொருளாளர் மணி உள்பட சுமார் 10க்கும் மேற்பட்டோர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது முதல்வர் படத்துடன் பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுத்து இவர் தான் நமது முதல்வர் விஜய் மாமா என்று சொல்லி தலைமை ஆசிரியர் முன்னிலையில் விஜய் படத்தை மாட்டி செல்போனில் வீடியோ எடுத்து ரீஸ்ல் ஆக சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

சமீபத்தில் அரசு பள்ளிகளில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் நுழைய கூடாது, மாணவர்களை சொந்தரவு செய்யக்கூடாது என அண்மையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிக்கை விடுத்தார். அமைச்சர் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட தவெகவினர் பள்ளிக்குள் சென்று ரீல்ஸ் எடுத்து இடையூறு செய்துள்ளனர். ஆய்வு என்ற பெயரில் தவெகவினர் தொடர்ந்து அத்துமீறும் செயல் அரங்கேறி வருவதாக மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

 

Related Stories: