ஜூன் முதல் டிசம்பர் வரை ஜல்லிகட்டு நடத்த அரசு அனுமதி வழங்கக்கூடாது; அரசின் விதிகள் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

 

மதுரை: ஜூன் முதல் டிசம்பர் வரை ஜல்லிகட்டு நடத்த அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை கடைபிடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் உறுதி செய்ய வேண்டும். சிவகங்கை மாவட்டம், மின்னல்கொடிப்பட்டியில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக ஜல்லிக்கட்டு நடத்த இருப்பதற்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும்; அரசின் விதிகள் மற்றும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது. உரிய அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டால் அதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தடை விதிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதை மாவட்ட ஆட்சியர்களும், எஸ்.பி.க்களும் உறுதி செய்ய வேண்டும்” என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி ஜனவரி மாதம் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், சிவகங்கை மாவட்டம், மின்னல்கொடிப்பட்டியில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக ஜல்லிக்கட்டு நடத்த இருப்பதற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமிநாராயணன் அமர்வு முன்பு இன்று (13.07.2026) விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே நடத்த வேண்டும். ஜூன் முதல் டிசம்பர் வரை நடத்த அரசு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட்டது. மேலும், உரிய அனுமதியின்றியோ, அரசின் விதிகள் மற்றும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமலோ ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டால் அதற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல்களையும் விதிகளையும் மாவட்ட ஆட்சியர்களும், எஸ்பிக்களும் (SPs) கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Related Stories: