சீனாவில் பலத்த மழை, வெள்ளத்திற்கு 39 பேர் பலி

பீஜிங்: சீனாவில் பெய்து வரும் கனமழை மற்றும் கடும் வெள்ளத்திற்கு 39 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மேசாக் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் குவாங்சி பிராந்தியத்தில் உள்ள அணை உடைந்தது. அணை வெள்ள நீர் நான்னிங் நகரில் புகுந்ததில் 26 பேர் உயிரிழந்தனர். வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை மொத்தம் 39 பேர் உயிரிழந்து விட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளத்தில் தப்பிய பாம்புகள்: குவாங்சி மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் வளர்ப்பு பண்ணைகளில் இருந்து 900க்கும் மேற்பட்ட விஷப் பாம்புகள் வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குவாங்சியில் உள்ள பாம்பு பண்ணையை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அதில் வளர்க்கப்பட்ட பாம்புகள் கிராமங்களுக்குள் புகுந்துள்ளன. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Related Stories: