டிசம்பருக்குள் சரணடைய முடிவு: வங்கதேசம் திரும்புகிறார் ஷேக் ஹசீனா..!

டெல்லி: பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், வரும்டிசம்பர் 2026-க்குள் மீண்டும் தனது நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அங்கு சென்றபின் நீதிமன்றத்தில் தானாக முன்வந்து சரணடைய திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தான் மட்டுமின்றி தனது அவாமி லீக் கட்சி சகாக்களும் டிசம்பர் மாதத்தில் தாயகம் திரும்பி அதிகாரிகளிடம் சரணடைய இருப்பதாக தெரிவித்தார். “அங்கு சென்ற பின் என்னை கைது செய்ய கூடும் அல்லது கொல்ல கூடும். மரண தண்டனை அல்லது கைது அச்சுறுத்தல்கள் என எதுவாக இருந்தாலும் சரி, சொந்த மண்ணில் இறக்க நேரிட்டால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் மற்றும் கலவரத்தைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு உயிரை காப்பாற்றி கொள்ள இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதன் பிறகு அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வங்கதேச நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 2024-ல் அந்த நாட்டில் நடந்த மாணவர் போராட்டத்தின் போது நிகழ்ந்த மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்காக, அந்நாட்டின்சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் நவம்பர் 2025-ல் ஹசீனாவுக்கு அவர் அங்கு இல்லாத நிலையிலேயே மரண தண்டனை விதித்தது. இது தவிர அரசு வளங்களை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு கூடுதலாக 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: