கப்பல்கள் மீது தாக்குதல் எதிரொலி ஈரானில் 90 இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா குண்டுமழை: பஹ்ரைன், குவைத், கத்தார் மீது ஈரான் தாக்குதல்

துபாய்: ஈரானில் சுமார் 90 இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா நேற்று அதிகாலை பயங்கர தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  ஓமன் கடற்கரைக்கு அப்பால் ஈரான் பல வர்த்தக கப்பல்கள் மீது நடத்திய சமீபத்திய தாக்குதல்களை தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலையில் அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் துறைமுக வசதிகள் மீது தாக்குதல் நடத்தியது.  இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல் நிலையற்ற போர் நிறுத்தத்தின் முடிவை குறிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார் இதனை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் அமெரிக்க படைகள் ஈரான் மீது புதிய தாக்குதல்களை தொடங்கின. நேற்று அதிகாலையில் அமெரிக்கா ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை தொடுத்தது.ஈரான் முழுவதும் சுமார் 90 இலக்குகளை தாக்கியதாக அமெரிக்க ராணும் தெரிவித்துள்ளது. மேலும் விமான நிலைய ஓடுபாதை, ஏவுகணை ஏவும் தளங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த கருப்பு வெள்ளை காணொளிக் காட்சிகளையும் அமெரிக்க ராணுவம் வெளியிட்டது.

இதற்கு பதிலடியாக ஈரானும் பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் மீது தாக்குதல் நடத்தியது. இது எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய தாக்குதலாக இருந்தது. அமெரிக்க கடற்படையின் 5வது படைப்பிரிவின் தலைமையகம் அமைந்துள்ள பஹ்ரைனில் குறைந்தது இரண்டு முறை அபாய ஒலி எழுப்பப்பட்டது. மூன்று வளைகுடா அரபு நாடுகளில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. ஈரான் ஏவிய டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தீவிரமாக இடைமறித்து வருவதாக குவைத் ராணுவம் தெரிவித்துள்ளது. பஹ்ரைன் மற்றும் குவைத் மீதான தாக்குதல்களுக்கு ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை பொறுப்பேற்றது.

* இந்தியா கையாளும் சபஹார் துறைமுகம் மீது தாக்குதல்
ஈரானின் தென்கிழக்கு துறைமுகமான சபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. சபஹார் நகர் முழுவதும் குண்டுவெடிப்பு சததங்கள் கேட்டதாகவும், நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது. சபஹார் துறைமுகத்தை இந்தியா கையாண்டு வருகிறது. இந்த துறைமுகம் மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதன்முறை. அங்குள்ள கப்பல் நிறுத்தும் இடங்கள், கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு கோபுரம், ராணுவ சொத்துக்கள் அமெரிக்கா தாக்குதலால் சேதம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* ஈரான் அணுமின் நிலையம் அருகே தாக்குதல்
ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்திற்கு அருகே அமெரிக்கா வான்வழித்தாக்குதல் நடத்தியதாக ஈரான் அதிகாரி குற்றம்சாட்டியிருக்கிறார். ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்க ராணுவம் முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறிய சில மணி நேரங்களுக்கு பின் நண்பகலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிகாரிகள் உடனடியாக ஒப்புக்கொள்ளவில்லை.

Related Stories: