சுரண்டையில் பரணி சில்க்ஸ் 5வது கிளை திறப்பு

சுரண்டை, மார்ச் 13: சுரண்டையில் பரணி சில்க்சின் 5வது கிளையை வாடிக்கையாளர்கள் திறந்து வைத்தனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் அண்ணா சிலை மேற்கு பகுதியில், பரணி சில்க்ஸ் புதிய ஜவுளிக்கடை திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு வந்தவர்களை உரிமையாளர் பொன்ராஜ் வரவேற்றார். புதிய கடையை வாடிக்கையாளர்கள் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், வியாபாரிகள், மருத்துவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

சுரண்டை பரணி சில்க்சின் தரை தளத்தில் சுடிதார், டாப்ஸ், நைட்டி மற்றும் உள்ளாடை ரகங்களும், முதல் தளத்தில் முகூர்த்தப்பட்டு, பேன்சி, காட்டன், பூனம் சேலை, பட்டு பாவாடை ரகங்கள், மேட்சிங் பிளவுஸ் ரகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் ஆண்களுக்கான ரெடிமேட், பேண்ட், சர்ட், டி-சர்ட் மற்றும் பாய்ஸ் கலெக்சன் சர்ட்டிங், சூட்டிங், வேஷ்டி, கைலி, துண்டு ரகங்களும், மூன்றாவது தளத்தில் பொன்ராஜ் ஸ்டோரின் கல்யாண சீர்வரிசை பாத்திரங்கள், எவர்சில்வர், பித்தளை பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளன.

இணை நிறுவனமான பொன்ராஜ் ஸ்டோர்ஸ் பர்னிச்சர்ஸ் பிரிவு அண்ணா சிலை வடபுறம் திறக்கப்பட்டது. இங்கு பீரோ, கட்டில், டைனிங் டேபிள், சோபா உட்பட அனைத்து பர்னிச்சர் பொருட்களும் கிடைக்கும். சொந்தமாக தயாரிப்பதால் தரமான பொருட்களை நியாயமான விலையில் வழங்குகின்றனர். சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெரு நகரங்களில் கிடைக்கக்கூடிய புத்தம் புதிய ரகங்கள், நூற்றுக்கணக்கான டிசைன்களில் ரெடிமேட் ஆடைகள், குரூப் சேலைகள், குரூப் சர்ட் விதவிதமான மாடல்களில் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் தரமான ஆடை ரகங்கள் குறைந்த விலையில் கிடைப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: