தவெகவினருக்கு ஆர்வக்கோளாறு அமைச்சர்களுக்கு பக்குவம் வேணும்: கார்த்தி சிதம்பரம் அட்வைஸ்

காரைக்குடி: ஆர்வக்கோளாறில் தவெகவினர் உள்ளதாகவும், அமைச்சர்களுக்கு பக்குவம் வரவேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்பி, நேற்று அளித்த பேட்டி: யார் குதிரை பேரத்தில் ஈடுபட்டாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கட்சிக்குள்ளேயே இருந்து செயல்பட வேண்டும்.

ராஜினாமா செய்வது, ஒரு கட்சியில் இருந்து இன்னோர் கட்சிக்கு தாவுவதை நான் வரவேற்பது இல்லை. தனிநபர் விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சியினரும் நட்புடன் இருக்க வேண்டும். கருத்துவேறுபாடு, கொள்கை வேறுபாடு இருப்பதாலேயே தனிநபர் விமர்சனத்தில் ஈடுபட வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

தவெக எம்எல்ஏக்கள் முதல்முறையாக எம்எல்ஏ ஆனவர்கள். பொது வாழ்க்கையில், அரசியல் அனுபவம் கிடையாது. அமைச்சர்களில் செங்கோட் டையன் மட்டுமே அமைச்சராக இருந்தவர், மற்றவர்கள் எல்லாம் முதல் முறை அமைச்சர்கள் ஆனவர்கள். இன்னும் பக்குவம் வரவேண்டும். தவெகவினர் ஆர்வக்கோளாறில் உள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: